தமிழர்களின் எழுச்சிக் குரலானது ஒன்று பட்டு ஒலிப்பதே ஆகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Wednesday, September 18th, 2019
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான எழுச்சிக் குரல் என்பது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களினதும் ஒன்று பட்ட ஒற்றுமையின் குரலாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்’ இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஆனாலும் தத்தமது கட்சி அரசியலின் இருப்புக்காகவும் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்கிலும் அவ்வப்போது தமிழரின் பேரால் நடத்தப்படும் தமிழர் எழுச்சி நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அதில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் சிறு கூட்டத்தை வைத்து, இதுதான் தமிழ் மக்களின் எழுச்சி என்றோ, அன்றி இத்தனை மக்கள்தான் உரிமை கேட்டு எழும் மக்கள் தொகை என்றோ யாரும் தப்புக்கணக்குப் போட மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்.
தமிழர்கள் மத்தியில் ஒரு எழுச்சி நடந்தால் அதை வைத்து சில தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமது அரசியல் தளத்தை ஊதிப் பெருப்பித்துப் பலப்படுத்துவதும் அதுபோல் தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சில அரசியல் சக்திகள் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்து தமிழர் தரப்பில் உள்ளவர்கள் சிலர் தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதும் என, இருதரப்பு அரசியல் நாடகங்களுமே இன்றும் நடந்தேறி வருகின்றன. இதை நாம் வெறுக்கின்றோம்.
இதில் இரு தரப்பு அப்பாவி மக்களே அரசியலுக்குப் பலியாகி வருகிறார்கள். தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சக்திகளும் தென்னிலங்கையில் இருப்பீர்கள். நீங்கள் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு தமிழர்களின் நியமான உரிமைகள் குறித்து தெளிவூட்ட வேண்டும்.
அதே போல் தமிழ் பேசும் மக்களுக்குத் தெளிவூட்டும் பொறுப்பை நாமே எடுத்திருக்கின்றோம். எம்மைப் பொறுத்த வரையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் யாருடன் பேசி எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமோ அவர்களோடு அரசியல் பேரம் பேசி எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையே நாம் விரும்புகிறோம்.
எமது வழிமுறையை எள்ளி நகையாடியவர்கள், தூற்றியவர்கள் எல்லோருமே இன்று எமது வழிமுறைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், போதிய அரசியல் பலமின்றிக்கூட நாம் முன்னெடுத்து வெற்றி கண்ட பொறிமுறையைக் கையாள.. போதிய அரசியல் பலத்தைக் கொண்டிருக்கும் சக தமிழ்த் தரப்பினர் முன்வந்திருக்கவில்லை.
தமிழ் மக்களை உசுப்பேற்றி வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தைத் தம் வசம் வைத்திருந்தவர்கள் கூடக் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்தித் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை.
தமிழ் மக்களின் உணர்வெழுச்சியை நான் மதிக்கின்றேன். ஆனாலும் எமது மக்களின் உணர்வெழுச்சியை வைத்துத் தத்தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்கும் சுயலாப அரசியலை வெறுக்கின்றேன்.
தமிழ் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவர்களது ஜனநாயக உரிமைகளை நான் மதிக்கின்றேன். ஆனாலும்,. கையில் வெண்ணையை வைத்திருந்தும் நெய் தேடி ஊர் தோறும் அலைவோரை நான் வெறுக்கின்றேன்.
நாம் மட்டுமல்ல, தமிழ் மக்களே அதை இன்று வெறுக்கத் தொடக்கி விட்டார்கள். புலத்தில் வாழும் மக்களிடம் பணம் பொறுக்கி களத்தில் வாழும் மக்களிடம் வாக்குப் பொறுக்கும் வங்கிரோத்து அரசியலைத் தமிழ் மக்கள் இன்று நிராகரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
இனி எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரும் சரி மக்களை உசுப்பேற்றி வீதிக்கு அழைத்தாலும் அவர்களுக்கும் இதே மறுப்புணர்வையே தீர்ப்பாக தமிழ் மக்கள் வழங்குவார்கள்.
எமக்கெதிரான அவமானங்கள்,. அவதூறுகள்,. எல்லாம் கடந்து நாம் செல்லும் வழியே தமிழர் எழுச்சிக்கும் உரிமைக்கும் தீர்வு காணும் வழிமுறையாகும்.
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே இதுதான் இன்றைய யாதார்த்தம் ஆனபடியினால் யாரையும் யாரும் எள்ளி நகையாட மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். எல்லோரும் ஏறிச் சறுக்கிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறிச் சறுக்கி விழுந்தாராம் என்பதையும் கூறி
எமக்கெதிரான அவமானங்கள்,. அவதூறுகள்,. எல்லாம் கடந்து நாம் செல்லும் வழியே தமிழர் எழுச்சிக்கும் உரிமைக்கும் தீர்வு காணும் வழிமுறையாகும்.
உறவுக்குக் கரம் கொடுப்போம்!
உரிமைக்குக் குரல் கொடுப்போம்.!!
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி!
வெல்வோம், முயல்வோம், உளம் சோரோம.;
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106