வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தற்போது நாடு உள்ளது – கோட்டாபய ராஜபக்ஷ!
Sunday, September 8th, 2019
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாட்டின் உள்ள மிக முக்கியமான பொருளாதார மையங்கள் அந்நியப்படுத்தவில்லை என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியில் நடைபெற்ற மஹா ஜன எக்சத் பெரமுண கட்சியின் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு தற்போது பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளதாகவும், அவற்றிலிருந்து விடுவித்து பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
Related posts:
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை!
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை - அராஜகங்களுக்கு இடமளிக்கப்படாது – ...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரியின் மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டது!
|
|
|


