தென்பகுதிக்கு ஏற்றுமதி : கடலுணவுகளின் விலைகளில் சடுதியான மாற்றம்!
Friday, September 6th, 2019
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மைய நாட்களாக மீன், நண்டு உள்ளிட்ட கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஒரு கிலோகிராம் 400 ரூபா முதல் 500 ரூபா வரை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள் தற்போது 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல ஒரு கிலோகிராம் 300 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மீன்வகைகள் தற்போது 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிடிக்கப்படும் கடல் மீன்கள், இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களில் பிடிக்கப்படுகின்ற நன்னீர் மீன்கள் என்பன தென்பகுதிக்கே ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரியவருகிறது. இதனாலே கடலுணவுகளின் விலைகளில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சார உற்பத்தி பாதிப்பு!
பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் - பிரதமர் தெரிவிப்பு!
அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள் - கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டு!
|
|
|


