தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா பட்டம் பெற்ற 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

Wednesday, September 4th, 2019


தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

19 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர், சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts:

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தும் மனு நிராகரிப்பு!
ஐ.நா பொதுச் செயலாளர் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைக...
அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!