நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி !

Monday, September 2nd, 2019


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் திம் சௌத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து, 175 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித மாலிங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி இதேமைதானத்தில் நடைபெறவுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106