FITS AIR விமான சேவை நிறுவனம் தனது இந்திய பயணத்தை ஆரம்பித்தது!

Saturday, August 31st, 2019


பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில். இங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், FITS AIR நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தனியார்துறை விமான நிறுவனமான FITS AIR நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட, பிட்ஸ் எயர் நிறுவனத்தின் 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 விமானம், காலை 9.10 மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது.

முன்னர், எக்ஸ்போ எயர் என்ற பெயரில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்ட நிறுவனமே தற்போது, FITS AIR நிறுவனம், என்ற பெயரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைகளையும், வெளிநாடுகளுக்கான சரக்கு விமான சேவைகளையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், FITS AIR நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106