உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
Wednesday, August 28th, 2019
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறும். முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும்.
முற்றாக மூடப்படும் பாடசாலைகள் அடுத்த தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அனைவருக்கும் சமமான பிரதிபலன்களை வழங்கும் சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது - ஜனாதிபதி தெரிவிப்ப...
நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்பு...
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!
|
|
|


