வாக்காளர் இடாப்பில் பிரச்சினையா? – முறையீடு செய்யுமாறு அறிவிப்பு!
Tuesday, August 27th, 2019
2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது இந்த வாக்காளர் இடாப்பு அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
இதில் தமது பெயர் இடம்பெறாவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னார் மேன் முறையீடு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான இரண்டு வாக்காளர் இடாப்பு கடந்த 23 ஆம் திகதி முதல் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் அண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் நீக்கப்பட்டுள்ள பெயர்களைக் குறிப்பிட்டு இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால...
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளம் பயணம்!
|
|
|


