தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர் – பிரதமர் கவலை!
Saturday, March 19th, 2022
தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் பல பிரச்சினைகளை ஏற்படுத்திய அதேவேளை, அரசாங்கம் வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் அவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமம் அபிவிருத்தியடைய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வீதி வலையமைப்புக்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய காலநிலையில் விரைவான அபிவிருத்தியை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தி படிப்படியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையை விவசாயத்தில் தன்னிறைவடையச் செய்வதே குறிக்கோள்- ஜனாதிபதி !
அதிகாரங்களை வழங்கும் பரிந்துரைகளை ஏற்கவில்லை - ஜனாதிபதி
தாதியர்களின் கற்கை நெறி தரமுயர்த்தப்படும் - உறுதி அளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!
|
|
|


