ICC தலைவர்-ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு!
Sunday, August 25th, 2019
சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) தலைவர் சஷான்க் மனோகர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் குறித்த சந்திப்பானது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கட்டின் எதிர்காலத்திற்காக தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் தலையீடு மற்றும் அழுத்தங்கள் இல்லாமல் விளையாட்டை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் குறித்த ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை கட்டியெழுப்புவதற்கு சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – யாழ்ப்ப...
கிரிக்கெட் ஜாம்பவான் அண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி!
உலகக் கிண்ண கால்பந்து - அரையிறுதிக்குள் ஆர்ஜன்டினா, குரேஷியா - நெதர்லாந்து, பிரேசில் வெளியேற்றம்!
|
|
|


