விஞ்ஞானம், கணித பாடங்களை தமிழ் மொழி மூலம் போதிப்பதற்கு 25 பாடசாலைகள் – அமைச்சர் கயந்த!
Saturday, August 24th, 2019
தமிழ் மொழி மூலம் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை போதிப்பதற்கு 25 தோட்டப்புற பாடசாலைகள் இனங்காணப்பட்டிருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பல மாவட்டங்களில் இந்த பாடங்கள் தமிழ்மொழி மூலம் போதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆசிரியர்களையும் வழங்கி இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஓய்வுபெறுவதற்கு 1853 ஊழியர்கள் விண்ணப்பம் – இலங்கை போக்குவரத்து சபை!
புங்குடுதீவு கடலில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்!
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைக்கும் பணிகள் விரைவில்!
|
|
|


