மதுபோதையில் சாரதித்துவம்: 9885 சாரதிகள் கைது – பொலிஸ் தலைமையகம்!
Friday, August 23rd, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 9885 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள் நியமனம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு - செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்!
|
|
|


