மின்னல் ஏற்படும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பில் வானிலை மையம் அறிவுறுத்தல்!
Sunday, April 21st, 2019
மத்திய, சப்ரகமுவ, வடமேல், மேல் மாகாணங்கள் போன்று அனுராதபுரம் , காலி , மாத்தறை , மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு எதிர்வரும் நான்கரை மணித்தியாலங்களில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அதேபோல் , இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மின்னல் ஏற்படும் போது திறந்த வௌியில் அல்லது மரத்தடியில் நிற்பதை தவிர்க்குமாறும், பாதுகாப்பான கட்டிடங்களில் அல்லது மூடப்பட்ட வாகனங்களில் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் , கைப்பேசி மற்றும் மின் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.
Related posts:
வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
விதிக்கப்பட்டுள்ள புதிய தடை - தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவிப்பு!
ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை...
|
|
|


