இந்த வருடத்தில் 66 யானைகள் உயிரிழப்பு!
Saturday, August 17th, 2019
2019ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதகாலப் பகுதிக்குள் பொலன்னறுவை பிரதேசத்தில் மட்டும் 66 யானைகள் உயிரிழந்துள்ளன.
அத்துடன் அதே பிரதேச எல்லைக்குள் சுமார் 15 மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக வனசீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2016ம் ஆண்டில் 76 யானைகளும், 21 மனித உயிர்களும் பலிகொள்ளப்பட்டிருந்தன. 2017ம் ஆண்டு யானைகளின் உயிரிழப்பு 44 ஆகவும் மனித உயிரிழப்பு 16 ஆகவும் பதிவாகியிருந்தது. 2018ல் 54 யானைகளும் 28 மனித உயிர்களும் இழக்கப்பட்டிருந்தன.
மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக யானைகள் அகால மரணத்தை எதிர்கொள்வதாகவும், அதிலும் பெருமளவான யானைகள் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகவும் வனசீவராசிகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
உடற்கல்வி டிப்ளோமா நியமனத்தை தரம் 3 க்குள் உள்வாங்கவும்
அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிப்புறக்கணிப்பில்!
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெண் உட்பட இரு பிள்ளைகளுக்கும் கொரோனா உறுதி!
|
|
|


