தலைமன்னார் – இந்தியாவிற்கு நேரடி கப்பல் சேவை? – அமைச்சர் ஜோன் அமரதுங்க!
Friday, August 16th, 2019
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்ப இலங்கை விருப்பத்துடன் உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இயல்பற்ற சூழ்நிலை காரணமாக இந்த கப்பல் சேவை கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெறவில்லை. இந்தநிலையில் இதனை ஆரம்பிக்க இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணிகள் கப்பல் சேவையில் பயணிகள் மாத்திரமல்ல இந்தியாவில் இருந்து வாகனங்கள் உட்பட்ட உபகரணங்களையும் எடுத்துவரமுடியும்.
அத்துடன் இந்திய உல்லாசப்பயணிகளையும் அதிகளவில் இலங்கைக்கு வரவழைக்கமுடியும் என்றும் அமைச்சர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
சார்க் மாநாடு நடைபெறுமா?
X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட இலங்கை வருகின்றது ஐ.நா குழு!
நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பி...
|
|
|


