மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!
Wednesday, August 14th, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8635 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் கண்டெடுப்பு!
உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!
குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி 6 ஆம் திகதி செல்வா நகரில் திறந்து வைப்பு - அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந...
|
|
|


