மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கல்வி அமைச்சின் செயலாளர் !
Thursday, August 8th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
பாடப் புத்தகங்களில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் நிழற்படங்களை அச்சிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய, கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளரான I.M.K.B இலங்கசிங்கவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் குறுந்தகவல் வசதியை பயன்படுத்தலாம் - யாழ். அரச அதிபர் அறிவிப்பு!
பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை நியமிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று !
தீவிரமடையும் சூறாவளி இலங்கையை தாக்கும்! சிவப்பு எச்சரிக்கை!
|
|
|


