இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் தனிமைப் படுத்தப்பட்டேன் – அஸ்வின்!

Wednesday, August 7th, 2019

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

பின்பு அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத் தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து உரையாற்றிய அவர், “இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்” என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106