கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சு!
Tuesday, August 6th, 2019
தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4,286 பேருக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
இந்த அறிக்கைகளுக்கு அமைய, 3,748 வெற்றிடங்கள் நிலவுகின்றதுடன், குறித்த இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்ததன் பின்னர் எஞ்சியுள்ள டிப்ளோமாதாரிகளை மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்முறை கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியைக் பயில்வதற்காக 8 ஆயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வியியல் பீடப் பிரிவு அறிவித்துள்ளது.
Related posts:
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 12 நாடாளுமன்றத்திற்கு!
வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு கிடைத்துள்ள 52,866 விண்ணப்பங்கள்!….
|
|
|


