55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்கிறது இந்திய அணி!
Monday, July 29th, 2019
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி 55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் எதிரொலியாக இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் இரு நாடுகள் இடையே டேவிஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 14, 15 திகதிகளில் இஸ்லாமாபாதில் நடைபெறும் டேவிஸ் கிண்ண போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய டென்னிஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக கடந்த 1964 இல் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண போட்டியில் இந்தியா 4-0 என்ற செட் கணக்கில் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாதனை படைக்கும் முனைப்பில் மலிங்க!
வி. பி. எல். உதைபந்தாட்டத் தொடர் - மகுடம் சூடியது !
சர்வதேச கிரிக்கெட் சம்மேளன தலைவராக ஜெய் சா தெரிவாக வாய்ப்பு!
|
|
|


