நேபாளத்தில் கடும் மழை – 114 பேர் பலி!
Saturday, July 27th, 2019
நேபாளத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளதாக நேபாளத்தின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கடும் மழைகாரணமாக பல தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதுதவிர பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நேபாளத்திலுள்ள 77 மாவட்டங்களில் 64 மாவட்டங்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் 40க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ரஷ்யாவில் அடுக்குமாடி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
காசா பகுதி வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்த்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் எ...
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து!
|
|
|


