சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
Monday, July 22nd, 2019
தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கம் தற்போது பல உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில் 1 இலட்சம் ரூபாவை செலவிடும் சோள உற்பத்தியாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக 3 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மாலபே மாணவர்களுக்கு பயிற்சி நிச்சயம்! - அமைச்சர் திஸாநாயக்க!
கடும் எரிபொருள் நெருக்கடி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அன...
வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 800 மில்லியன் ரூபா தேவை – அரச அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே த...
|
|
|


