ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
Friday, March 4th, 2022
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஜபோரிஜியா தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகின்றன.
அணுமின்நிலைய கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் எறிகணை தாக்குதல் காரணமாக அணுமின்நிலையம் தீப்பிடித்துள்ளது என எனர்ஹொடரின் மேயர் டிமிட்ரோவ் ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பகுதியில் உள்ள நகரத்திற்கு வெளியே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ரஷ்ய படையினர் டாங்கிகளின் உதவியுடன் நகரத்திற்குள் நுழைவதற்கும் அணுமின் நிலையத்தை கைப்பற்றுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் பொதுமக்கள் அணுமின்நிலையத்திற்கு அருகிலும் நகரத்தின் பல பகுதிகளிலும் கொங்கிறீட் தடுப்புகளை அமைத்து போரிட்டு வருகின்றனர். இதனிடையே உக்ரைனில் நான்கு அணுமின்நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது – மலேசியாவில் சம்பவம்!
மன்னார் ஜோசப்வாஸ் கிராம கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இறங்குதுற...
தேர்தல் கடமைகளுக்காக சுமார் 500 பேருந்துகள் - 20 ஆம் திகதி நாடு முழுவதும் 50 வீத பேருந்துகள் பணியில்...
|
|
|


