லொரி கவிழ்ந்து கோர விபத்து – மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
Saturday, July 20th, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பலோஜோன் நகரின் மலைப்பாங்கான பகுதியில் லொரி சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
கறுப்பு பட்டியலில் ஷெரீஃப் மகன்கள் பெயர் : கடவுச்சீட்டுகள் முடக்கம்!
இந்தியா- காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்தும் உக்கிரம்!
மலேசியாவில் அகதிகளுக்கு நேர்ந்த துயர் - 11 பேர் பலி - 25 பேர் மாயம்!
|
|
|


