வடக்கு கிழக்கிற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்!
Saturday, July 13th, 2019
நாட்டில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புதிய திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் குறித்த பகுதிகளில் புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறை அபிவிருத்திக்காக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றில் முதற்தடவையாக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு ,தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
Related posts:
20 ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் அரசாங்கம்? - நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவிப்...
நிமோனியா நோய் தொடர்பில் ஆரம்பத்தில் இனங்கண்டால் குணப்படுத்த முடியும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன...
திசைகாட்டியோடு திசைமாறிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம். - ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் சுட்டிக்காடு!
|
|
|


