மதுபோதை சாரத்தியம்: 1763 சாரதிகள் கைது!
Wednesday, July 10th, 2019
கடந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 263 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக விஷேட நடவடிக்கை கடந்த 05ம் திகதி ஆரம்பமாகி இன்று வரை 1763 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றச்சாட...
ஜனாதிபதியிடம் உமாஓய திட்டத்தின் அறிக்கை கையளிப்பு!
கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் 70% இனால் குறைவடைந்துள்ளது - தேசிய டெங்கு தடுப்பு பிரிவு!
|
|
|


