கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சி வழங்க தீர்மானம்!

Tuesday, July 9th, 2019

சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி திட்டங்களை வழங்குவது குறித்து தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (நைற்றா)மூலம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நைற்றா நிறுவனத்தின் தலைவர் நஸிர் அஹமட்டுக்கும், சிறைத் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

சிறையிலுள்ள கைதிகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சிகளை வழங்குவதுடன் அதனைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அரச அங்கீகாரமுள்ள சான்றிதழ்களை வழங்கப்படும்.

இதனால் எதிர்காலத்தில் இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்யவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

நைற்றா நிறுவனம் தற்போது 16 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலாருக்கும் பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கி வருவதுடன், தகவல் தொழில் நுட்பம் குறித்த புதிய பாட விதானங்களை அறிமுகம்செய்து அவற்றுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்த பயிற்சிகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் தமது வாழ்கை வளமேம்பாட்டுக்கான பயிற்சிகளை பெற்றுவருவதுடன் தொழில்துறை வாய்ப்புக்களையும் பெற்று வருகின்றனர்.

மேற்படி நிறுவனத்தின் தலைவராக நஸிர் அஹமட் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பல்வேறு புதிய செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்த நிறுவனத்தில் பயிற்சியை பெற்றுக்கொண்டவர்கள் தமது மேலதிக கல்விகளை வெளிநாடுகளிலுள்ள அரச, தனியார் பல்கலைகழங்களில் பெற்றுக்கொள்ளவும் முன்பள்ளி ஆசிரியைகள் தமது கல்விமேம்பாட்டை வளர்த்துக் கொள்ளுவதற்கான பயிற்சித்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தனியார் தொழில் துறைகளில் இளையவர்கள் வாய்ப்புகளைப்பெற கூட்டுறவு பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில் சிறைக் கைதிகள் மற்றும் மனநிலை பாதிப்பிற்கு உள்ளானவர்களின் மேபாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106