மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளிற்கு தடை!
Sunday, July 7th, 2019
போயா மற்றும் ஞாயிறு தினங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்கான தனிநபர் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்தை முன்னாள் நீதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ சமர்பிக்க உள்ளார்.
1971 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள் சட்டப்பிரிவு இலக்கம் 29 ஐ திருத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு எவ்வகையிலேனும் பிரத்தியேக வகுப்புகளை பௌர்னமி தினமான போயா தினத்தன்றோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை மூன்று மணிவரை எவரேனும் வளாகங்களிலோ அல்லது ஏதேனும் இடத்திலோ நடத்த முடியாதென புதிய திருத்த சட்டமூலம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!
மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம் - குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி - தாம் கூறிய கருத்தில்...
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு தீர்மான...
|
|
|


