மீண்டும் சீனியுடனான பானங்களுக்கு வரி !

Thursday, July 4th, 2019

சீனியுடனான பானத்திற்கு மீண்டும் வரி விதிப்பதற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனியுடனான பானத்திற்காக விதிக்கப்பட்டிருந்த வரி 52 நாட்கள் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது நீக்குவதற்கு அப்போதைய பிரதமராக குறிப்பிடபட்டிருந்த மகிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் விடுத்துள்ளார்

சீனியுடனான பானத்திற்கு மீண்டும் வரியை விதிப்பதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இது தொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது, இந்த விடயம் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் வரியை நீக்குவதன் மூலம் சீனியுடனான பான விற்பனை சந்தையில் இருந்து அகற்றப்படும்.

இது தொடர்பாக நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 6 கிராம் சீனியை கொண்டுள்ள பானங்களுக்கான வரியை விதிக்காது செயல்படுவதற்கும் ஏனைய சீனி கலந்த பானங்களுக்கு வரி விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் இடம்பெறவுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106