ஜேர்மனியில் உலங்குவானூர்தி விபத்து : விமானி பலி !
Wednesday, July 3rd, 2019
ஜேர்மனியில் ராணுவ உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், பழமையாகிப்போன ராணுவ தளவாடங்கள் அனைத்தையும் ஒதுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Hanover நகரில் நேற்று இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதாக ஜேர்மன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உலங்குவானூர்தியில் பயணித்த இரு விமானிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்ததற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராணுவத்தில் உள்ள இராணுவ தளபாடங்கள் மிகவும் பழமையாக உள்ளதாகக் கோரி, அவைகளை நவீனப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த வாரத்தில் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட நிலையில், இந்த உலங்குவானூர்தி விபத்து ஒரே வாரத்தில் நிகழ்ந்துள்ள இரண்டாவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106