முடிவில் மாற்றம் இல்லை – ராகுல் காந்தி!

Friday, June 28th, 2019

தான் தற்போது தலைவர் பொறுப்பில் இல்லை எனவும் தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி தலைமையில் நேற்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டடம் இடம்பெற்றது.

இதன்போது, ராகுல் காந்தி பதவிவிலகும் முடிவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் பேரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.

இதன் போது உரையாற்றிய ராகுல் காந்தி, தான் தற்போது தலைவர் பொறுப்பில் இல்லை எனவும் தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் அந்த முடிவில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106