அமெரிக்க அதிபர் தென் கொரியா பயணம்!
Tuesday, June 25th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை தென் கொரியா செல்லவுள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதிக்கும் தென் கொரிய ஜனாதிபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரு தலைவர்களும் ஜப்பான் செல்வார்கள் என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜேயின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பிற்கு சாதகமான கடிதம் ஒன்றை அனுப்பியதை தொடர்ந்து, மீண்டும் அமெரிக்க-வட கொரிய தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர, இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்றவகையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106