27 ஆம் திகதி முதல் இ.போ.சவின் புதிய பேருந்துகள் சேவையில்!
Monday, June 24th, 2019
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பேருந்துகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக இது கருதப்படுகிறது. தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.
ஒரு பஸ்ஸின் பெறுமதி 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
Related posts:
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் - கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை - கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரு...
எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு ஆளாகக்கூடாது - சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
|
|
|


