ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் – கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!

Saturday, July 22nd, 2017

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்று கடற்படை தலைமையகத்தில்  சந்தித்துள்ளனர். இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இச் சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் முதல் கடற்படை பாதுகாப்பு பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் யொஷிஹிரோ கோகா, ‘இசுமோ’ மற்றும் ‘சசனமி’ கப்பல்களில் கட்டளை அதிகாரிகளான கேப்டன் யொஷிஹிரோ கய், கொமான்டர் ஹிரோடகா ஒகுமுரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts:


யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமை எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் - இந்திய துணைத்தூதர் நடராஜன் பெருமிதம்!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதில் மாற்றம் - சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு த...
சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் அறிவுறுத்து!