உலக கிண்ணம்: இந்தியா வெற்றி!
Sunday, June 23rd, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 28வது போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றி மிரட்ட இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திகில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கிண்ணம் தொடரின் 28-வது போட்டி சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.
ரோகித் சர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதனால் இந்திய அணியின் ஓட்ட வேகம் குறைந்தது.
இருப்பினும் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். கோஹ்லி 67 ஓட்டங்களிலும், கேதார் ஜாதவ் 52 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 225 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி கலமிறங்கியது. ஹஸ்மதுல்லா சசாயும், அணித்தலைவர் குல்பதின் நயிபும் ஆடினர்.
நயிப் (27), ரஹ்மத் ஷா (34), ஹஸ்மதுல்லா ஷஹிதி (21) ஓட்டங்களிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய மொகமது நபி ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். இறுதி ஓவரில் 52 ஓட்டங்கள் எடுத்து அவுட்டனார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதனால் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இறுதி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106