முஸ்பிகுர் போராட்டம் வீண் : அவுஸ்திரேலியா வெற்றி!
Friday, June 21st, 2019
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 26வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாடிங்ஹாமில் நடந்த 26வது போட்டியில் அவுஸ்திரேலியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர் 166, பின்ச் 53, கவாஜா 89 ஓட்டங்களை பெற்றுக் கைகொடுக்க, அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு, 381 ஓட்டங்கள் குவித்தது.
இமாலய இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு, சவுமியா சர்கார் 10 சுமாரான துவக்கம் அளித்தார். தமீம் 62 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் வந்த ஷாகிப் அல் ஹாசன் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த லிடன் தாஸ் (20) ஜாம்பா சுழலில் சிக்கினார். பின்னர் முஷ்பிகுருடன் இணைந்த மகமதுல்லா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவுஸ்திரேலியா பந்துவீச்சை நாலா பக்கமும் சிதற விட்டனர். இந்நிலையில் வங்கதேச அணி வெற்றி பெற 30 பந்தில் 82 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
மகமதுல்லா 69 ஓட்டங்கள் எடுத்து கூல்டர் நைல் வேகத்தில் வெளியேறினார். அடுத்த பந்திலேயே சபீர் ரஹ்மானையும் (0) வெளியேற்றினார் கூல்டர் நைல்.
இதையடுத்து வங்கதேச அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 333 ஓட்டங்கள் மட்டும் எடுத்து 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் 333 ஓட்டங்கள் குவித்த வங்கதேச அணி, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
முன்னதாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 2011ல் மிஸ்பூரில் நடந்த போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்டுக்கு 295 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக குறைந்த பந்தில் (41 பந்துகள்) அரைசதம் அடித்த மகமதுல்லா தனது முந்தைய சாதனையை (49 பந்துகள், 2011) தானே முறியடித்தார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106