அமைச்சுக்களது மூலதனச் செலவினம் 15% இனால் குறைப்பு – நிதிஅமைச்சு!

Wednesday, June 19th, 2019

அனைத்து அமைச்சுக்களுக்குமான மூலதனச் செலவினை 15% இனால் குறைக்குமாறு நிதி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து அமைச்சுக்களதும் செயலாளர்களை இரு வாரங்களுக்கு முன்னரே நிதியமைச்சிற்கு அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசினால் எதிர்பார்த்த வருமானத்தில் குறைவு, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்டவையை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts:

ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவ...
இலங்கையிலும் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 9 மரணங்ளும் 491 பேருக்கு த...
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது - அமைச்சu; பந்துல குணவர்தன...