ஆவாக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் உடுவில் பகுதியில் கைது
Saturday, March 19th, 2016
வாள்வெட்டு, அத்துமீறிப் பொருட்களைச் சூறையாடியமை, அத்துமீறி வீடு புகுந்தமை மற்றும் பொருட்களைச் சேதமாக்கியமை போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படும் ஒருவர் கடந்த புதன்கிழமை உடுவில் அம்பலவாணர் வீதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் எனச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மாதங்களாகப் பொலிஸாரின் கண்களில் மண்தூவி மறைந்திருந்த குறித்த நபர் கோப்பாய், அச்சுவேலி, மற்றும் சுன்னாகம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸ் புலனாய்வுப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் இடப்பெற்ற கடும் குற்றச் செயலான வீடுடைப்பு, அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் அவருக்கெதிராக உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வால்வேட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனவும், கைதான சந்தேக நபரை மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106