உலகக்கிண்ணத் தொடர் – பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

Monday, June 17th, 2019

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நேற்று(16) இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி ரோஹித் சர்மா 140 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 77 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைகாரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதற்கமைய டக்வத் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 302 என்ற இலக்கை அடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106