ரஷ்ய – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு!
Friday, June 7th, 2019
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது சிறந்த நண்பன் என சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தெரிவித்துள்ளார்.
சீனா ஜனாதிபதி ஸீ ஜின் பிங், 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் சில வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் வர்த்தக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கியத்துவமிக்கதாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்க அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!
‘ஒபெக்’ அமைப்பில் இருந்து விலகியது கட்டார்!
இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை : பாகிஸ்தான் பிரதமர் !
|
|
|


