வாகன இலக்கத்தகடுகள் யாழ். மாவட்ட மோட்டார் திணைக்களத்தில் மக்கள் பார்வைக்கு!

Thursday, June 6th, 2019

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து யாழ்.மாவட்ட செயலக மோட்டார் பாவனை போக்குவரத்து திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற வாகன இலக்கத்தகடுகளின் பட்டியலை பொது மக்கள் பார்வையிட முடியும்.

இந்த இலக்கத்தகடுகளின் பட்டியலை யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டச் செயலக இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

இதற்கமைவாக புதிய வாகனங்களைப்பதிவு செய்த உரிமையாளர்கள் வாகனப்பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை என்பவற்றையும், மாகாணங்களுக்கிடையே வாகன உரிமை மாற்றம் பெற்றவர்கள் மேற்குறித்த இரு ஆவணங்களுடன் பழைய வாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொறித்த ஒட்டும் தாள் (Sticker) என்பவற்றையும், யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என யாழ்ப்பாணம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106