அரசியல் தளம்பல்: தடுமாறுகிறது இலங்கையின் பொருளாதாரம் – உலக வங்கி!
Thursday, June 6th, 2019
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற தன்மையானது பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
21/4 தாக்குதல் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களால் இலங்கையில் அரசியல் ஆட்டம் கண்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்கனவே அதிருப்திநிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனில் நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை உருவாகவேண்டும்.
அதை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இலங்கையில் புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு!
குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடி...
2022 ஆம் ஆண்டு இலங்கை மாத்திரம் அன்றி பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது - சர்...
|
|
|


