ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்!
Saturday, June 1st, 2019
நாட்டில் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளது. எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Related posts:
சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் - GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை!
பொது மக்களுக்கான வேலைத்திட்டங்களை இணையத்தளத்தில் அறிந்துகொள்ள வசதி!
தொற்றா நோய்களினாலேயே இலங்கையில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன - வெளியான திடுக்கிடும் தகவல்!
|
|
|


