பதவியில் இருந்து நீக்கப்பட்டார் நெய்மர் !

Wednesday, May 29th, 2019

பிரேசில்லின் தேசிய காற்பந்து அணித் தலைவர் பதவியில் இருந்து புகழ்பெற்ற வீரர் நெய்மர் நீக்கப்பட்டுள்ளார்.

அந்த பதவியில் டேனி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் நெய்மருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் அதிக மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில், அணித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

27 வயதான நெய்மரும், 36 வயதான அல்விஸும், பாரிஸ் சென்.ஜேர்மெயின் கழகத்தில் ஒன்றாக விளையாடுகின்றவர்களாவர்.

அல்விஸ் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் பிரேசில் காற்பந்து கழகத்துக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளார்.

இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் அவர் தலைமையில் பிரேசில் 1 – 0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106