காத்மண்டுவில் குண்டுவெடிப்பு – 04 பேர் உயிரிழப்பு!
Monday, May 27th, 2019
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள தலைநகரான காத்மண்டுவில் நேற்று, சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள நேபாள இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு, இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106