சிறைச்சாலைக்குள் மோதல் – வெனிசுலாவில் 29 பேர் பலி!
Saturday, May 25th, 2019
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தற்போது நாடு உள்ளது - கோட்டாபய ராஜபக்ஷ!
இலங்கையில் இரு மடங்காக அதிகரித்துள்ள உப்பு பாவனை - பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!
நீண்டகாலமாக சிறையிலிருக்கும் புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் - ஜனாதிபதியிடம் ஞானசார தேரர்...
|
|
|


