சிற்பக் கலாபூஷணம் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Monday, July 11th, 2016
யாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் யாழ். இராமநாதன் நுண்கலைத் துறையின் விரிவுரையாளருமான சிற்பச் சித்திர கலாநிதி கலாபூஷணம் அமரர் செல்லையா சிவப்பிரகாசம் அவர்களது பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அன்னார் நேற்று (10) காலை காலமானார். கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து தமது இறுதி அஞ்சலியை செலுத்திய டக்ளஸ் தேவானந்தா அவரது பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.




Related posts:
ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சுயாதீன ஊடக ஆணைக்குழு!
பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை – துறைசார் தரப்பினரிடம் ஜனாத...
|
|
|


