அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு!
Thursday, May 16th, 2019
சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான குறித்த கால எல்லை இம்மாதம் 20ஆம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடி பொருட்களை வைத்திருப்போர் தொடர்பில் பொலிசாருக்கு தகவல்களை வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் வழங்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இளைஞர்களுக்கிடையே மேதல்: வவுனியாவில் பதற்றம்!
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிப்பது சவாலான விடயம் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டி...
சீர்திருத்தத்தை உடன் தொடங்குங்கள் - இலங்கையை வலியுறுத்தும்!.…
|
|
|


