இலங்கைக்கு 164. 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி – சர்வதேச நாணய நிதியம்!

Tuesday, May 14th, 2019

இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.

இந்த தொகை இலங்கைக்கு வழங்கவுள்ள 5ஆவது கட்ட கடன் தொகையாக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிறுப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் இந்த கடன் தொகை வழங்குவதில் கால தாமதம் இடம்பெற்றிருந்தது.

தற்பொழுது அந்நிய செலவாணி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலவாணி கையிறுப்பு தொடர்பான நடைமுறைகளில் திருப்தி கொண்டிருப்பதினால் சர்வதேச நாணய நிதியம் இந்த தொகையை விடுவிப்பதற்கு முன்வந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக பணிப்பாளரும் சபையின் பதில் தலைவருமான மிட்சுஹிரு புருஸ்வா தெரிவித்துள்ளார்.

Related posts:

தம்பாட்டியில் நள்ளிரவு திருடர்கள் கைவரிசை - ஆலயம் உள்ளிட்ட பல இடங்கள் உடைத்து பெறுமதியான பொருட்கள் த...
ஓய்வூதியக் கொடுப்பனவு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டய...
உள்ளூராட்சி மன்ற நிர்வாகத் திறன்களை மேம்படுத்துவது குறித்து ஆசி உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் கலந்துரையாடல...

கலை, இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடத்தில் தூண்டும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி...
தேசிய பட்டியில் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் ஆகஸ்ட் 12 இல் புதிய அமைச்...
நள்ளிரவுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு - நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!