இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை!
Thursday, May 2nd, 2019
இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் மற்றும் சர்வதேச கிரிக்கட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் இலங்கை அணி தோல்வி!
இலங்கை அணியின் வெற்றி குறித்து ரணதுங்க!
ஐ.பி.எல் ஏல பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள்!
|
|
|


